தாளவாடி அருகே புலி தாக்கி பசு மாடுகள் சாவு
தாளவாடி அருகே புலி தாக்கியதில் பசு மாடுகள் இறந்தன.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இந்த வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 36). விவசாயி. இவர் 4 மாடுகளும் வளர்த்து வருகிறார். சுமதி வழக்கமாக மாடுகளை தோட்டத்தில் விட்டு ஒரு இடத்தில் கட்டி விடுவார். அதன்படி நேற்று காலையும் வழக்கம் போல் தனது மாடுகளை தன்னுடைய தோட்டத்தில் கட்டிவைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை 3 மணியளவில் தோட்டத்தில் உள்ள மாடுகளை பார்க்க சுமதி சென்றார். அப்போது 2 மாடுகள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. இதை பார்த்து சுமதி அதிர்ச்சி அடைந்ததார்.
உடனே இதுபற்றி அருகில் உள்ள விவசாயிகளுக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்த கிடந்த பசு மாடுகளையும், கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.அதன்பின்னர் அவர்கள் கூறும்போது, புலி தாக்கியதில் மாடுகள் இறந்துள்ளன' என்று தெரிவித்தார்கள். தோட்டத்துக்கே வந்து மாடுகளை புலி வேட்டையாடிய சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Tags :
Next Story