சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், அஜித்பவார்


சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், அஜித்பவார்
x
தினத்தந்தி 26 Oct 2019 5:00 AM IST (Updated: 26 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை அஜித்பவார் பெற்றுள்ளார்.

மும்பை, 

சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை அஜித்பவார் பெற்றுள்ளார்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

மராட்டிய சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவார் பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவில் மாநிலத்திலேயே மற்ற எல்லா வேட்பாளர்களையும் விட அவர் தான் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

அஜித்பவார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் கோபிசந்த் படல்கரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 265 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அஜித்பவாருக்கு 1 லட்சத்து 95 ஆயிரத்து 641 வாக்குகள் கிடைத்தன. கோபிசந்த் படல்கர் 30 ஆயிரத்து 376 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.

குறைந்த வாக்கு...

இந்த தேர்தலில் மிக குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் மும்பை சாந்திவிலியில் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் திலிப் பாவுசாகேப் லாண்டே வெற்றி பெற்று உள்ளார்.

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆரிப் நசீம்கானை வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Next Story