வாணாபுரம் அருகே,காப்புக்காடுகளில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடும் மர்ம நபர்கள்


வாணாபுரம் அருகே,காப்புக்காடுகளில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடும் மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:00 AM IST (Updated: 26 Oct 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே காப்புக்காடுகளில் கத்தியை காட்டி மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். எனவே, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் அருகே தச்சம்பட்டு, அள்ளிகொண்டாபட்டு, தாங்கள், தலையாம்பள்ளம், சக்கரத்தான் மடை, நரியாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான காப்புக் காடுகள் உள்ளது.

தச்சம்பட்டில் இருந்து வாணாபுரம் செல்லும் சாலை ஓரங்களில் அடர்ந்த காட்டுப்பகுதி இருப்பதால் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் வந்து செல்வது வழக்கம். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கொண்டு இவ்வழியாக செல்வார்கள்.

இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், நடந்து வருபவர்களை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருக்கும் பணங்கள் மற்றும் பொருட்களை பறித்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில், தற்போது பண்டிகை காலம் என்பதால் வெளியூரில் இருந்து இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் அதிகளவில் வந்து செல்லக்கூடிய சூழல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் காப்புக் காடுகள் இருப்பதால் உள்பகுதி வழியாக சென்றுதான் தாங்கள் இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. மேலும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கத்தியை காட்டி கொண்டு வரும் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை பறித்து செல்கின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

Next Story