அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அரியலூர்,
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனும் வெற்றி பெற்றனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மீன்சுருட்டி கடைவீதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜா ரவி தலைமையிலும், செந்துறையில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையிலும் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து திருமானூரில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில், அக்கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர். இதில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் வேப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் அந்தூர் ராஜேந்திரன் உள்பட பலர் கொண்டனர்.
Related Tags :
Next Story