படப்பை அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
படப்பை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் செல்லும் சாலையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பிரபாகரன் (வயது 61), மனைவி, மகன், மருமகளுடன் வசித்து வந்தார். இவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் உள்ள மகளின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபாகரனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரபாகரன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து பிரபாகரன் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையில் சென்ற போலீசார் வீட்டை சுற்றி ஆய்வு செய்தனர். காஞ்சீபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 2 தனிப்படை அமைக்கப்பட்டு நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story