சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்: மாணவர்களுக்கு, கலெக்டர் அருண் வேண்டுகோள்


சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்: மாணவர்களுக்கு, கலெக்டர் அருண் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Oct 2019 4:45 AM IST (Updated: 26 Oct 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுப்புறங்களை மாணவர்கள் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்று கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கலெக்டர் அருண் தலைமையில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று உழவர்கரை மேல் நிலைப்பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் கலெக்டர் அருண் ஆய்வு நடத்தினார்.

அப்போது கலெக்டருடன் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு மாநில திட்ட அதிகாரி சுந்தர்ராஜ், மலேரியா உதவி இயக்குனர் கணேசன், ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வடிவேல் ராஜன், கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் பேசும்போது, மாணவர்கள் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தால் சமுதாயத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையும் என்று குறிப்பிட்டார். வாரம் ஒருமுறை தாங்கள் படிக்கும் பள்ளிகள், வீடுகள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மலேரியா உதவி இயக்குனர் கணேசன் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story