ஆசனூர் அருகே சாலையோரத்தில் படுத்திருந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்
ஆசனூர் அருகே சாலையோரத்தில் சிறுத்தை படுத்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.
குறிப்பாக யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை அதிக அளவில் உள்ளன. ஆசனூர் வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் பஸ், லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். யானைகள் அடிக்கடி நெடுஞ்சாலை ஓரம் வந்து நின்றுகொள்ளும். அதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் யானைகளை படம் பிடித்து மகிழ்வார்கள். இதற்கிடையே சில நாட்களாக சிறுத்தைகளும் ரோட்டு ஓரங்களுக்கு வரத்தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் 1 மணி அளவில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று வந்தபடி இருந்தன. அப்போது செம்மண்திட்டு என்ற இடத்தில் திடீெரன ஒரு சிறுத்தை வந்து ரோட்டு ஓரத்தில் படுத்துக்கொண்டது.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை படுத்திருப்பதை பார்த்து பயத்தில் அலறியபடி வண்டியை நிறுத்திக்கொண்டர்கள். சிலர் சற்று தூரத்தில் இருந்து செல்போனில் படம் பிடிக்க முயன்றார்கள்.
சுமார் 10 நிமிடம் படுத்திருந்த சிறுத்தை அதன்பின்னர் தானாக காட்டுக்குள் சென்றுவிட்டது. இந்த சம்பவத்தால் ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

Related Tags :
Next Story