குருபெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து திட்டை கோவிலில் கலெக்டர் ஆய்வு
திட்டை கோவிலில் குருபெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
குருபெயர்ச்சி விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.49 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தகரப்பந்தல், குடிநீர் தொட்டிகள், கழிவறை, குப்பை தொட்டிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
தடையில்லா மின்சாரம்
விழா நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பக்தர்கள் எளிதாக சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. தரிசன பாதையில் மழை நீர் தேங்காதவாறு மணல் பரப்பப்பட்டு வருகிறது.
பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு பலகைகள், கோவில் குளத்தில் தடுப்பு கட்டைகள், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக கூடுதல் பஸ் வசதி, ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் குழுக்கள், கூடுதல் காவலர்கள், தீயணைப்பு வாகனம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விழா நடைபெறும் நாட்களில் கோவில் வளாகத்தில் குப்பைகள் சேராத வண்ணம் உடனுக்குடன் அப்புறப்படுத்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது இந்துசமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மின் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story