திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Oct 2019 10:30 PM GMT (Updated: 26 Oct 2019 8:39 PM GMT)

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவட்டார்,

108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இங்கு ஐப்பசி திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுஜித் நம்பூதிரி கொடி ஏற்றி வைத்தார். குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, ஆதிகேசவா அறகட்டளை செயலாளர் அனந்தகிருஷ்ணன், பக்தர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா வருகிற 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

ஆறாட்டு

விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை தினமும் காலையில் நாராயண பாராயணம், சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தீபாராதனை போன்றவை நடைபெறும். வருகிற 3-ந் தேதி காலையில் தீபாராதனை, சாமி பவனி வருதல், இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவையும், 4-ந் தேதி காலையில் ராமாயண பாராயணம், மாலையில் சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 7 மணிக்கு சாமி கருட வாகனத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளல் போன்றவையும் நடைபெறும். 

Next Story