கோவை-பொள்ளாச்சி ரெயில் பாதையை மின்மயமாக்க திட்டம்; மின்கம்பங்கள் அமைக்க அளவீடு பணிகள் மும்முரம்
கோவை- பொள்ளாச்சி ரெயில் பாதையை மின்மயமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மின்கம்பங்கள் அமைக்க அளவீடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி,
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில்பாதையை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நிரந்தர மற்றும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இதை தவிர கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கும், மதுரை-திருவனந்தபுரம், பாலக்காடு- சென்னை, பாலக்காடு-திருச்செந்தூர் ஆகிய ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்கிடையில் திண்டுக்கல் வழியாக போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி-பாலக்காடு இடையே உள்ள ரெயில் பாதையை மின் மயமாக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கம், பயணிகள் நலச்சங்கம் (வார்ப்) உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரெயில்வே துறை மேற்கண்ட ரெயில் பாதை மின்மயமாக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் அதற்கான முதற்கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மின்மயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இதற்கிடையில் மத்திய ரெயில்வேயின் மின் மயமாக்கல் அமைப்பு மூலம் முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதை, பொள்ளாச்சி-திண்டுக்கல், பொள்ளாச்சி-பாலக்காடு ஆகிய ரெயில் பாதைகளில் தண்டவாள பகுதியில் மின்கம்பங்கள் அமைக்க அளவீடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து ரெயில் வே அதிகாரிகள் கூறியதாவது:-
2019-20-ம் நிதி ஆண்டில் தென்னக ரெயில்வே துறைக்கு உட்பட்ட 1,166 கிலோ மீட்டர் ரெயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளுக்கு 9 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கிலோ மீட்டர் தூரமும், பொள்ளாச்சி-போத்தனூர் இடையே 40 கிலோ மீட்டர் தூரமும், விருத்தாச்சலம்-கடலூர் துறைமுகம் இடையே 57 கிலோ மீட்டர் தூரமும் ஆகிய 3 வழித்தடங்களை மின்மயமாக்கும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 33 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வேக்கு முதற்கட்ட நிதியாக ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தண்டவாள பகுதிகளில் எத்தனை மின் கம்பங்கள் அமைப்பது குறித்த அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொள்ளாச்சி பகுதிகளில் அளவீடு பணிகள் மேற்கொள்ள 3 குழுக்கள் அமைக் கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நவீன கருவி மூலம் அளவீடு பணிகள் மேற்கொண்டு மின் கம்பங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களில் அடையாள குறியீடு போட்டு உள்ளனர். பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதையில் அளவீடு பணிகள் நிறைவடைந்து விட்டன.
மேலும் ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்கு உள்ள சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் மின்மயமாக்கும் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. மின்மயமாக்கும் பணிகள் மூலம் ரெயில்கள் இயக்க ஆகும் செலவு குறையும். டீசல் என்ஜினை ஒரு முறை இயக்குவதற்கு 50 லிட்டர் டீசல் செலவாகும். மின் மயமாக்கல் மூலம் டீசல் செலவு முற்றிலும் குறைந்து விடும். ரெயில்களில் வேகம் அதிகரிப்பதால், பயண நேரமும் வெகுவாக குறைக்கப்படும். மின்மயமாக்கல் பணிகளை தொடங்கிய, ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு கூடுதலாக ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story