மழை பெய்தபோதும் தண்ணீருக்காக ஏங்கும் வல்லூர் அணை
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஜெகநாதபுரம், வண்ணிப்பாக்கம் அணைக்கட்டுகள் வழியாக வல்லூர் அணையை வந்தடையும்.
மீஞ்சூர்,
கொசஸ்தலை ஆறு தமிழகத்தில் 61½ கி.மீ., ஆந்திராவில் 62 கி.மீ. தொலைவுக்கு பாய்கிறது. பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஜெகநாதபுரம், வண்ணிப்பாக்கம் அணைக்கட்டுகள் வழியாக வல்லூர் அணையை வந்தடையும்.
1872-ம் ஆண்டு சீமாபுரம் மடியூர் கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அணை கட்டப்பட்டது. 4 மதகுகளுடன் நீர் வெளியேறும் வகையில் 4 ஆயிரத்து 972 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை ஓரளவு நன்றாக பெய்து வருகிறது. ஆனால் தாமரைப்பாக்கத்தில் இருந்து வல்லூர் அணை வரை தண்ணீரின்றி கொசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தே வல்லூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
ஆக்கிரமிப்புகளால் இந்த தண்ணீர் கொசஸ்தலை ஆறு வழியாக வல்லூர் அணைக்கட்டை வந்து சேருவதில்லை என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story