பவாயில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கழுத்தை அறுத்து கொலை


பவாயில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 28 Oct 2019 4:15 AM IST (Updated: 28 Oct 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

பவாயில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை பவாய் துங்கா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அங்கித் தேவிபிரசாத் (வயது22). நேற்று இவர் குடியிருப்பு கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் காவலாளியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காவலாளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்தவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் அங்கித் கோயல் கூறும்போது,"காவலாளியை நன்கு தெரிந்த ஒருவர் தான் இந்த கொலையை செய்து உள்ளார். கொலையாளியை கண்டுபிடிக்க அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

Next Story