அரசு டாக்டர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம் நோயாளிகள் கடும் அவதி
கரூரில், அரசு டாக்டர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கரூர்,
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும், அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பு பணியிடங்களுக்கு முறையான வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும், காலமுறை ஊதிய உயர்வு-பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
கரூர் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பிலும் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதனையொட்டி, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பணியில் ஈடுபடுவதை புறக்கணித்து, மருத்துவமனை வளாகத்தில் போடப்பட்டிருந்த சாமியானா பந்தலின்கீழ் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டாக்டர்களும் பங்கேற்றனர். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவராமன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் விஜயகுமார், சரவணன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நோயாளிகள் அவதி
டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் கரூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், தீபாவளி பண்டிகையையொட்டி உணவு பதார்த்தங்களை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை உள்ளிட்டவற்றுக்காக சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஒருபுறம் நீடித்தாலும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, காய்ச்சல் வார்டு ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன. எங்களது கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை வேலை நிறுத்தம் நீடிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story