சித்த மருத்துவம் குறித்து விளக்க முகாம்
பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சித்த மருத்துவம் பற்றிய விளக்க முகாம் நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்களை சுகாதார விழிப்புணர்வு பணியில் ஆர்வம் உண்டாகும் பொருட்டும், டெங்கு காய்ச்சல் உருவாகும் விதத்தினை கிராமப்புற மக்கள் உணர்ந்து கொள்ளும், தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடந்தது.
அதில் மாணவர்கள் மூலமாக கிராம மக்களுக்கு தமிழக அரசின் புதிய திட்டமான தூய்மை தூதுவர் என்ற திட்டம் குறித்து விளக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் புகையிலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அடுத்ததாக டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நபிஷா பானு தலைமை தாங்கினார். தொடர்ந்து சித்த மருத்துவம் குறித்து மாணவ-மாணவிகள், கிராம மக்களிடையே விளக்க முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் சித்த மருத்துவர் சரவணன், டாக்டர்கள் செந்தில்குமார், முத்தமிழ் செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு சித்த மருத்துவம் பற்றி விளக்கி கூறப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிரான்மலை சார்பாக அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
முறையூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் 18 பேருக்கும் மற்றும் மாணவர்கள் 250 பேருக்கும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்கள், நோயின்றி வாழ வழிமுறைகள், சித்த மருந்துகள் உடலில் வேலை செய்யும் விதம், மூலிகைகள் அடையாளம் காணுதல், குறித்து விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆதவன் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முருகேசன், மருத்துவமனை பணியாளர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story