வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி


வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2019 3:30 AM IST (Updated: 29 Oct 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.

திருமங்கலம்,

திருமங்கலம் முன்சீப்கோர்ட் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது40). இவர் மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி சென்றுவிட்டு வந்துகொண்டு இருந்தார். அப்போது ராஜபாளையம் விலக்கு அருகே வந்தபோது செங்கப்படையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வாய்பூட்டான்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (30). இவர், மனைவி கனிமொழியுடன் மோட்டார்சைக்கிளில் விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார். சிவரகோட்டை அருகே வந்த போது நாய் குறுக்கே வந்ததுள்ளது. அப்போது நாய் மீது மோதி கீழே விழுந்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கனிமொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்த் (32). இவரது மனைவி வளர்மதி (25). இருவரும் சிந்துபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது காரிகுட்டிபட்டி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வளர்மதி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story