ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் பத்மநாதன், புவியியல் நிபுணர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருமானூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் கலந்து கொண்டு, தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்க்கவசம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை இருசக்கர வாகனங்களில் கட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story