திருவோணம் அருகே மின்னல் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
திருவோணம் அருகே மின்னல் தாக்கியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக பலியானார்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள பாதிரங்கோட்டை தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மகாபாரதி(வயது 19). இவர், நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத்(18). இவர் செங்கிப்பட்டியில் உள்ள அரசு என்ஜினீரியங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தீபாவளியன்று உரம் வாங்குவதற்காக பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மின்னல் தாக்கி பலி
இந்த நிலையில் அதம்பை வடக்கு ஏரி அருகே சென்றபோது மழை பெய்ந்தது. இதனால் இருவரும் அங்குள்ள ஒரு புளியமரத்தின் கீழ் நின்றனர். அப்போது திடீரென புளியமரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மகாபாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கோபிநாத் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story