மாவட்டத்தில் 4-வது நாளாக அரசு டாக்டகள் வேலைநிறுத்த போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு டாக்டகள் நேற்று 4-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் அரசு டாக்டர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்ப, மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். கிராம சேவை செய்த டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் உள்ள டி.ஏ.சி.பி.ஐ. அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளுக்கு மட்டுமே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட டாக்டர் கள் கலந்து கொண்டனர்.
இது தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் கைலாஷ் கூறும்போது, எங்களது சங்கத்தில் மாவட்டத்தில் 200 டாக்டர்கள் உள்ளனர். எங்களது மாநில செயற்குழு தீர்மானத்தின்படி, நாங்கள் கூட்டங்கள் மற்றும் பயிற்சியை புறக்கணித்துள்ளோம். இந்த போராட்டம் தொடரும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள் மற்றும் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறோம் என்றார்.

Related Tags :
Next Story