விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவருக்கு வலைவீச்சு
விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
திருவள்ளூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி வனஜா. கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் லோகேஷ் தன்னுடைய மனைவியை அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து வனஜா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
தாக்குதல்
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக் குமார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த லோகேஷிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகள் பேசி சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story