அவினாசி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்


அவினாசி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:15 PM GMT (Updated: 29 Oct 2019 1:17 PM GMT)

அவினாசி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஒரு தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 16 தொழிலாளர்கள் ஒரு வேனில் அவினாசியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மணி (45) என்பவர் வேனை ஓட்டி சென்றார்.

அவினாசியை அடுத்து அவினாசிலிங்கம்பாளையம் நால்ரோடு அருகே வேன் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வேன் தாறுமாறாக சாலையில் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மீது மோதி கவிழ்ந்தது.

அப்போது வேனில் இருந்த தொழிலாளர்கள் அலறினார்கள். உடனே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளான வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வேனில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த அல்லாதி நிசேட் (வயது 43), பாலிமா போட்ரா (19), பிரேம்லதா நாக் (20), சுரமா மஜித் (20)ரீட்டா பாய் (25) உள்ளிட்ட 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story