15 ஆயிரம் பேருக்கு விரைவில் முதியோர் உதவி தொகை - அமைச்சர் கந்தசாமி தகவல்
முதியோர் உதவி தொகை வழங்காமல் விடுபட்டுள்ள 15 ஆயிரம் பேருக்கு விரைவில் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி,
ஏம்பலத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் கந்தசாமி பேசும்போது கூறியதாவது:-
மக்களுக்கு இலவசமாக தரமான வெள்ளை அரிசி வழங்கும் திட்டத்தை வைத்திலிங்கம் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தோம். இந்த திட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருகிறார். இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆனால் மக்கள் அரிசி வழங்குவதையே விரும்புகின்றனர். பணத்துக்குப் பதில் இலவச அரிசி வழங்கும்படி அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
இது தொடர்பாக கவர்னருக்கு சந்தேகம் இருந்தால் குரல் வாக்கெடுப்பு மூலம் இதை அறிந்து இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் தரலாம்.
பல இடங்களில் கவர்னர் ஆய்வுக்கு சென்றபோது அரிசி வழங்கும்படி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கவர்னர் இந்த கோரிக்கையை நிராகரித்து பணமாக வழங்கும்படி வலியுறுத்தி வருகிறார். எனவே இந்த பிரச்சினையில் வைத்திலிங்கம் எம்.பி. மத்திய அரசிடம் பேசி இலவசமாக அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பார்.
எனது தொகுதியிலும் அதிகாரிகள் செயல்படாததால் குறைகள் நிறைய உள்ளது. இன்னும் காங்கிரஸ் ஆட்சிக்காலம் 18 மாதங்கள்தான் உள்ளது. அதற்குள் அனைத்து திட்டங்களையும் எப்படியாவது நிறைவேற்றுவோம்.
புதுவை மாநிலத்தில் 25 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்ஷன் வழங்க திட்டமிட்டோம். இதில் 10 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். முதியோார் உதவி தொகை வழங்காமல் விடுபட்டுள்ள 15 ஆயிரம் பேருக்கு விரைவில் உதவி தொகை வழங்குவோம். மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். இந்த முகாமை அரசு துறை செயலாளர்கள் புறக்கணித்தது வருத்தம் தருகிறது. உயரதிகாரிகள் மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்த முட்டுக்கட்டையாக உள்ளனர். அதனையும் மீறி எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும், தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கியும் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். வரும் காலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story