மத்திய அரசுக்கு எதிராக சென்னை துறைமுக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
சென்னை துறைமுக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை துறைமுக டிரஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் (எம்.பி.டி.இ.யு - எச்.எம்.எஸ்.) அவசர ஆலோசனை கூட்டம், சென்னை பாரிமுனையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இந்து மஸ்தூர் சபா தொழிற்சங்க முன்னாள் தேசிய தலைவர் தம்பன் தாமஸ், துணை தலைவர் பி.எம்.முகமது ஹனீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, தம்பன் தாமஸ் ஆகியோர் கூறியதாவது:-
மத்திய அரசு தொடர்ந்து துறைமுக கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னை துறைமுக கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிறப்பு வி.ஆர்.எஸ். திட்டத்தின்கீழ் விருப்ப ஓய்வு பெற்றவர்களின் இடங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. மேலும் 32 சதவீத ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளன. ஊழியர் சேவையை குறைத்து எந்திரத்தின் சேவையை அதிகப்படுத்தி வரும் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். வருகிற 2, 3-ந்தேதிகளில் மும்பையிலும், 12-ந்தேதி டெல்லியிலும் தேசிய அளவில் கூட்டம் நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story