திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் கடத்தல்: காதலனின் பெற்றோர் கைது


திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் கடத்தல்: காதலனின் பெற்றோர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்திற்கு முந்தைய நாளில் மணப்பெண்ணை கடத்தி சென்ற காதலனின் பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 25). இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று, கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணிற்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி மணப்பெண்ணின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மணப்பெண் நேற்று கடத்தி செல்லப்பட்டாராம். வீட்டில் இருந்த மணப்பெண்ணை காணாததால், பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.

தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் விசாரித்த போது கமலக்கண்ணன், அவரது தந்தை சண் முகசுந்தரம், தாயார் மீனாட்சி உதவியுடன் மணப்பெண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித், ஏட்டு அய்யனார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, மணப்பெண்ணை கடத்த உதவியதாக கமலக்கண்ணனின் தந்தை தந்தை சண்முகசுந்தரம் (55), தாயார் மீனாட்சி (50) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காதலன் கமலக்கண்ணன், மணப்பெண் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story