சென்னை மாநகரில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை மாதக்கணக்கில் பழுது கண்டு கொள்ளாத அதிகாரிகள்
சென்னையில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை மாதக்கணக்கில் பழுதாகி உள்ளது.
சென்னை,
பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களுக்கு மாதம்தோறும் முதல் தேதியில் சம்பளம் வழங்க முடியாத நிலையில் நிறுவனம் தள்ளாடி வருகிறது. போதுமான வருமானம் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுகிறது? என்ற தகவலும் பரவியது. இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர். இது ஒருபுறம் இருக்க சமீப காலமாகவே சென்னை மாநகரில் உள்ள பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு சேவை குறைவு இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்களும் எழுந்து உள்ளன.
குறிப்பாக சென்னை மாநகரில் சாலைகள் தோண்டுவது, இயற்கை சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தரைவழி தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனை சரி செய்து தரும்படி வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டும் பயனில்லை. குறிப்பாக சென்னையில் 044-2661 8898 என்ற எண் ஒரு மாதகாலமாக செயல்படாமல் இருக்கிறது. புகார்கள் அளித்தும் பயனில்லை. இதுபோன்று வாடிக்கையாளர்கள் சேவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் குறைபாடாக இருக்கிறது என்பதால் தான் பொதுமக்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களை நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இனியாவது மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story