மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை,
குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்து அருள் புரிவது வழக்கம். இதை குருப்பெயர்ச்சி எனக்கூறுவார்கள். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நேற்று அதிகாலையில் இருந்து நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பிரகதாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல சாந்தநாதசுவாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவேங்கைவாசல்
புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கைவாசலில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து குருபகவான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திருவேங்கைவாசல், புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவரங்குளம், அன்னவாசல்
திருவரங்குளத்தில் உள்ள புகழ்பெற்ற சோழர்காலத்து சிவன்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் குருபகவானை எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் குருபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல அன்னவாசல் அடுத்து உள்ள நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலையில் உள்ள அரங்கமலை சித்தர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
அரிமளத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், மணமேல்குடியில் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குடி தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story