மாவட்டம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க உத்தரவு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்து இறந்தான். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பராமரிப்பு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறு மட்டுமின்றி கிணறுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் நடந்தது போன்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story