எடப்பாடி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
எடப்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானார்.
எடப்பாடி,
எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி சரோஜா (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் காய்ச்சல் சரியாக வில்லை என்று கூறப்படு கிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரோஜா வீடு திரும்பினார். இதனிடையே நேற்று காலை சரோஜா திடீரென்று உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மேற்பார்வையில் மோட்டூரில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் குப்பைகள் அகற்றப்பட்டதுடன், கொசுப்புழு ஒழிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.
Related Tags :
Next Story