ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 31 Oct 2019 3:30 AM IST (Updated: 31 Oct 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு,

ஈரோட்டில் ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் அரசின் திட்டப்பணிகள் ஒப்பந்தம் எடுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் தனியார் கட்டிடங்களை கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சக்திமகால் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

கோவை வருமான வரி அலுவலகத்தை சேர்ந்த சுமார் 8 பேர் கொண்ட குழுவினர் காலையில் கட்டுமான நிறுவன அலுவலகத்துக்குள் சென்றனர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் யாரையும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அவர்களுடைய செல்போன்களையும் அதிகாரிகள் வாங்கி கொண்டனர். அதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்து ஆய்வு செய்தனர். ஒப்பந்தம் எடுக்கப்பட்ட திட்டப்பணிகள், வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதேபோல் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் அதிகாரிகள் குழு சென்று சோதனை நடத்தியது.

Next Story