மாவட்ட செய்திகள்

திருச்சியில் 2-வது நாளாக அடைமழை காவிரி பாலத்தில் சேதம்; திருவெறும்பூரில் வீடுகள் இடிந்தன + "||" + Damage to Atmavasi Cauvery Bridge in Trichy Houses were demolished in Thiruverumbur

திருச்சியில் 2-வது நாளாக அடைமழை காவிரி பாலத்தில் சேதம்; திருவெறும்பூரில் வீடுகள் இடிந்தன

திருச்சியில் 2-வது நாளாக அடைமழை காவிரி பாலத்தில் சேதம்; திருவெறும்பூரில் வீடுகள் இடிந்தன
திருச்சியில் 2-வது நாளாக அடைமழை பெய்தது. இதனால் காவிரி பாலத்தில் சேதம் ஏற்பட்டது. திருவெறும்பூரில் வீடுகள் இடிந்து விழுந்தன.
திருச்சி,

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி வருவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது.


நேற்று 2-வது நாளாக மதியம் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையினால் கண்டோன்மெண்ட் அய்யப்பன்கோவில், மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன், டி.வி.எஸ். டோல்கேட், கருமண்டபம் பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலை ஓரங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. கருமண்டபம் பகுதியில் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது.

காவிரி பாலத்தில் சேதம்

திருச்சியில் பெய்து வரும் அடைமழையினால் காவிரி பாலத்தின் 3-வது தூண் மேல் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக போலீசார் ‘பேரிகாட்’ வைத்து உள்ளனர். ஏற்கனவே சிறிய அளவில் இருந்த பள்ளம் தொடர்ந்து பெய்த மழையினால் பெரிதாகி சேதம் அடைந்து உள்ளது. பாலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் ராஜவீதியில் கூத்தைப்பாரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான யாரும் வசிக்காத பழமையான மாடி வீடு உள்ளது. அந்த வீடு நேற்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த வீட்டின் இடிபாடுகள் விழுந்ததில் அருகில் இருந்த ஒரு ஓட்டு வீடும் சேதம் அடைந்தது. அந்த வீட்டில் வசித்து வரும் பெல் ஒப்பந்த தொழிலாளி சுப்பிரமணி, அவரது மனைவி மின்னல் கொடி, மகன்கள் புகழேந்தி, பூபாலன், சிவா, ஆனந்தபிரபு ஆகிய 6 பேரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக 6 பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.

மேலும் நேற்று மாலையில் இருந்து இரவு வரை திருச்சியில் அவ்வப்போது சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. அடை மழையினால் திருச்சியில் நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசியது. இதனால் வீட்டில் மின்விசிறி இல்லாமல் தூங்க முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. மாடு மேய்ந்ததால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் சாலை மறியல்
திருக்காட்டுப்பள்ளி அருகே மாடு மேய்ந்ததால் நெல் வயல்கள் சேதம் அடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. பட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீப்பிடித்தது ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
பட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
3. புறக்காவல் நிலைய சுவரை சேதப்படுத்திய மத்திய பிரதேச பா.ஜனதா எம்.பி. மீது வழக்கு
மத்திய பிரதேசத்தில் புறக்காவல் நிலைய சுவரை சேதப்படுத்திய பா.ஜனதா எம்.பி. உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. வால்பாறை அருகே, அரசு பள்ளியில் சத்துணவுக்கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானை
வால்பாறை அருகே அரசு பள்ளியில் உள்ள சத்துணவுக்கூடத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.
5. குன்னம் அருகே தனியார் கல்லூரி பஸ்களை சேதப்படுத்திய வழக்கில் 10 பேர் கைது
குன்னம் அருகே தனியார் கல்லூரி பஸ்களை சேதப்படுத்திய வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.