புஞ்சைபுளியம்பட்டி அருகே, ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது - தனியார் நிறுவன ஊழியர் உயிர் தப்பினார்
புஞ்சைபுளியம்பட்டி அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் தனியார் நிறுவன ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புஞ்சைபுளியம்பட்டி,
கோவை மாவட்டம் பாரதிபுரம் துளசிதாசர் வீதியை சேர்ந்தவர் சேசுபாதம் (வயது 56). இவர் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தனக்கு சொந்தமான காரை கடந்த ஒரு ஆண்டாக நிறுவனத்தின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டு இயங்காமல் இருந்தது. இந்த நிலையில் சேசுபாதம் அந்த காரை பராமரிப்பு செய்வதற்காக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டிக்கு நேற்று ஓட்டி சென்றார். ஆலாம்பாளையம் அருகே மாலை 4.30 மணி அளவில் சென்றபோது காரின் பின்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி அவர் அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து கார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து நாசம் ஆனது. தீப்பிடித்ததும் சேசுபாதம் வேனை விட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story