மாவட்ட செய்திகள்

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல் + "||" + For educated youth You can apply for a job creation program Collector Information

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. அதேபோல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதன் நகல், மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, விலைபுள்ளி மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம் திருவண்ணாமலை அலுவலகத்திற்கு நேரில் வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்கள் பெற 8668147561, 9486494621 ஆகிய தொலைபேசியில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக புத்தாக்க திட்டத்தை 6 ஒன்றியங்களில் செயல்படுத்த முடிவு - கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம் 6 ஒன்றியங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
2. திருவண்ணாமலையில் ரூ.2 கோடியில் உருவாக்கப்படும் அறிவியல் பூங்கா - பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.2 கோடியில் உருவாகும் அறிவியல் பூங்காவிற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
3. பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
4. ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் தகவல்
ஆயத்த ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள இளைஞர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
5. கேபிள் டி.வி.யில் ‘அனலாக்’ முறையில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் - ஆபரேட்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கேபிள் டி.வி.யில் அனலாக் முறையில் ஒளிபரப்புவதை ஆபரேட்டர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-