சிவகங்கை, சாலையில் ஓடிய வேனில் திடீர் தீ


சிவகங்கை, சாலையில் ஓடிய வேனில் திடீர் தீ
x
தினத்தந்தி 1 Nov 2019 3:45 AM IST (Updated: 1 Nov 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற வேனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கவுரிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது48). விவசாயியான இவர் அங்குள்ள மேலக்காடு என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் சம்பங்கி பூக்கள் உற்பத்தி செய்து வருகிறார். நேற்று பாண்டியன் தனது மனைவி கலைச்செல்வியுடன் தோட்டத்தில் விளைந்த சம்பங்கி பூக்களை மதுரைக்கு ஆம்னி வேனில் எடுத்து சென்று பூமார்கெட்டில் கொடுத்துள்ளார்.

பின்னர் மீண்டும் மனைவியுடன் வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். சிவகங்கை- தொண்டி சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் வரும்போது வேனில் திடீரென தீப்பிடித்தது. வேனின் முன் பகுதியில் புகை வந்தது. இதையடுத்து பாண்டியன் வேனை நிறுத்தி விட்டு மனைவியுடன் கீழே இறங்கி தப்பினார்.

தகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் 2வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.

Next Story