மாவட்ட செய்திகள்

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு + "||" + In the cemetery, the Cauvery Disciplinary Committee examined

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு
கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் மற்றும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவினர் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் தஞ்சை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்லணைக்கு வந்து, மதகு பாலங்களை பார்வையிட்டனர்.


அப்போது கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகியவற்றுக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் முறை, அதன் மூலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து காவிரி ஒழுங்காற்று குழுவினரிடம் பொதுப்பணித்துறை காவிரி வடி நில கோட்ட தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் விளக்கி கூறினர்.

வரவேற்பு

கல்லணைக்கு வந்த காவிரி ஒழுங்காற்று குழுவினரை செயற்பொறியாளர் ராஜன், கல்லணை உதவி பொறியாளர் ஆன்ட்டு ஆகியோர் வரவேற்றனர். கல்லணையை ஆய்வு செய்த பின்னர் குழுவினர் அங்கிருந்து முக்கொம்பு அணைக்கு புறப்பட்டு சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்
இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
2. உரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்றால் சிறை தண்டனை அதிகாரி எச்சரிக்கை
உரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்பனை செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
3. மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
4. ராசிபுரம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ராசிபுரம் ஒன்றிய பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
5. சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் கலெக்டர் ஆய்வு
சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் எல்லை கற்கள் நடப்பட்ட பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார்.