பா.ம.க. முப்படைகள் சந்திப்பு கூட்டம்: சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


பா.ம.க. முப்படைகள் சந்திப்பு கூட்டம்: சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 7:03 PM GMT)

சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்று சோளிங்கர் அருகே நடந்த பா.ம.க. முப்படைகள் சந்திப்பு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

சோளிங்கர், 

சோளிங்கர் அருகே மருதாலம் கிராமத்தில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள்படை ஆகிய மூன்றும் சேர்ந்து முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பழனி, பாஸ்கர், ஜெகன், சிவாஜி, சோளிங்கர் நகர செயலாளர் மேகா, நகரத்தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சட்ட பாதுகாப்பு துணை செயலாளர் வக்கீல் சக்கரவர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தம்பி, தங்கைகளே உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. எனது நோக்கம் நீங்கள் அனைவரும் நல்லமுறையில் படித்து, பெற்றோர்களை மதித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்.

குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். படித்து வேலை அல்லது சுயதொழில் செய்து நீங்கள் முன்னேற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நோக்கம். நீங்கள் முன்னேறுவதற்காக பல திட்டங்கள் உங்களுக்காகவே வைத்துள்ளேன். அன்புமணி கண்ட கனவை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும். நாடு முன்னேற வேண்டும் அதற்காகவும் பல திட்டங்கள் வைத்துள்ளேன்.

ஒரு ஆண்டில் தேர்தல் வரப்போகிறது. மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக இளைஞர்களான என் தம்பிகளையும், தங்கைகளையும் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில இணைப்பு செயலாளர் இசக்கி படையாட்சி, மாநில அமைப்பு செயலாளர் மீ.கா.செல்வக்குமார், மாநில துணை பொது செயலாளர் சரவணன், மாநில பொது செயலாளர் முரளி, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் ஆகியோர் பேசினர்.

இதில் இளைஞர் சங்க செயலாளர் தீனதயாளன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம், ராமதாஸ், கார்த்திக்ராஜா, சண்முகம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story