மாவட்ட செய்திகள்

புவனகிரியில், புதுப்பெண், வி‌‌ஷம் குடித்து தற்கொலை - திருமண வாழ்க்கை பிடிக்காததால் விபரீத முடிவு + "||" + In Bhuwanagiri, a new woman commits suicide by drinking

புவனகிரியில், புதுப்பெண், வி‌‌ஷம் குடித்து தற்கொலை - திருமண வாழ்க்கை பிடிக்காததால் விபரீத முடிவு

புவனகிரியில், புதுப்பெண், வி‌‌ஷம் குடித்து தற்கொலை - திருமண வாழ்க்கை பிடிக்காததால் விபரீத முடிவு
திருமண வாழ்க்கை பிடிக்காததால் புவனகிரியில் புதுப்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புவனகிரி, 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சி அருகே உள்ள வையூர் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகள் துர்காதேவி(வயது 20). நாகை மாவட்டம் புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் துர்காதேவி தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், தான் மேல்படிப்பு படிக்க விரும்புவதாகவும் கூறி வந்துள்ளார். இருப்பினும் பெற்றோர் வற்புறுத்தியதன்பேரில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் உள்ள ஒரு பேட்டரி விற்பனை கடையில் ஊழியராக பணிபுரிந்து வரும் கீழ்புவனகிரியை சேர்ந்த பு‌‌ஷ்பராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்த துர்காதேவிக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துர்காதேவி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த துர்காதேவிக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
2. திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு
திருவேங்கடம் அருகே சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. திருச்சி ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை
திருச்சி ஓட்டல் அறையில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் உருக்கமான கடிதம் சிக்கியது.
4. குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை
மலப்புரம் அருகே குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. கடன் பிரச்சினையால் டிராக்டர் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவண்ணாமலை வேங்கிக்கால் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சக்தி (வயது 40), டிராக்டர் டிரைவர். சக்தி கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை