பெங்களூருவில் இன்று: கர்நாடக அரசு சார்பில் ராஜ்யோத்சவா விழா - எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூருவில் இன்று: கர்நாடக அரசு சார்பில் ராஜ்யோத்சவா விழா - எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 1 Nov 2019 5:34 AM IST (Updated: 1 Nov 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு சார்பில் ராஜ்யோத்சவா விழா பெங்களூருவில் இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றுகிறார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி கர்நாடகம் உதயமான தினம், ராஜ்யோத்சவா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதன்படி மாநில அரசு சார்பில் ராஜ்யோத்சவா விழா இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

அதுபோல் பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் ராஜ்யோத்சவா விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. போலீசாரின் அணிவகுப்பும் நடக் கிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 64 பேருக்கு இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்யோத்சவா விருது வழங்கப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா இந்த விருதை வழங்குகிறார்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ராஜ்யோத்சவா விழா நடக்கிறது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றுகிறார்கள். மந்திரிகள் இல்லாத மாவட்டங்களில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Next Story