மாவட்ட செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே, திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை + "||" + Near Kaveripatnam, Newborn suicide in 4 months of marriage

காவேரிப்பட்டணம் அருகே, திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே, திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
காவேரிப்பட்டணம் அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அருகே ஜெகதாப் பக்கமுள்ளது பெரியஅய்யக்கான் கொட்டாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி ரோஜா (வயது 23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரோஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெண்ணின் தந்தை சென்றாயன் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் திருமணம் ஆகி 4 மாதங்களுக்குள் புதுப்பெண் இறந்துள்ளதால் இது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விளாத்திகுளம் அருகே பரிதாபம்: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
விளாத்திகுளம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.
2. கள்ளக்குறிச்சியில், புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. நெல்லிக்குப்பம் அருகே, புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் விபரீத முடிவு
நெல்லிக்குப்பம் அருகே தலை தீபாவளி கொண்டாட பெற்றோர் வீட்டுக்கு வந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.