மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற போது பரிதாபம்: மின்மோட்டார் மீது விழுந்த மூதாட்டி சாவு + "||" + Pity on the walk: The grandmother dies after falling on the electric motor

நடந்து சென்ற போது பரிதாபம்: மின்மோட்டார் மீது விழுந்த மூதாட்டி சாவு

நடந்து சென்ற போது பரிதாபம்: மின்மோட்டார் மீது விழுந்த மூதாட்டி சாவு
தர்மபுரி அருகே, நடந்து சென்ற மூதாட்டி நிலை தடுமாறி மின்மோட்டார் மீது விழுந்து பரிதாபம் உயிரிழந்தார்.
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள சோலைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 75). இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த மின்மோட்டார் மீது நிலை தடுமாறி தவறி விழுந்தார். 

இதில் காயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.