காதல் திருமணம் செய்த ஒரு ஆண்டில்: கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? தீவிர விசாரணை


காதல் திருமணம் செய்த ஒரு ஆண்டில்: கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? தீவிர விசாரணை
x
தினத்தந்தி 1 Nov 2019 10:43 PM GMT (Updated: 1 Nov 2019 10:43 PM GMT)

கதக் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு ஆண்டில் கர்ப்பிணியான பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கதக்,

கதக் மாவட்டம் எலசிரூரு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். சவனூர் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சீமா(வயது 25). இவர் கதக் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சென்னம்மா படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர்கள் 2 பேரும் காதலித்தனர்.

இந்த காதலுக்கு குமாரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் சீமாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சீமா தனது கணவர் குமாருடன் கதக் மாவட்டம் பெடகேரி படாவனே போலீஸ் எல்லைக்குட்பட்ட சம்பாபுரா ரோட்டில் அமைந்திருக்கும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். மேலும் சீமா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று காலையில் குமார் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சீமா, திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பெடகேரி படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story