ஆலங்குளம் அருகே, கோவில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி சாவு


ஆலங்குளம் அருகே, கோவில் சுவர் இடிந்து விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 1 Nov 2019 10:30 PM GMT (Updated: 1 Nov 2019 11:57 PM GMT)

ஆலங்குளம் அருகே கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள ஆர்.நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சண்முகையா (வயது 85). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

அவர் அங்குள்ள மாயகிருஷ்ணன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோவில் சுற்றுச்சுவர் பலமிழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அந்த சுவர் இடிந்து சண்முகையா மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உக்கிரன்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story