குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ.8¾ லட்சம் நிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்


குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ.8¾ லட்சம் நிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:30 AM IST (Updated: 2 Nov 2019 8:05 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ.8¾ லட்சம் நிதியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.

நாகர்கோவில்,     

குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் லாபத்தில் இருந்து 5 சதவீத தொகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிதி கூட்டுறவு ஒன்றிய வளர்ச்சிக்கும், கல்வி பணிக்கும் செலவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2016–2017–ம் ஆண்டில் குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு ஒரு கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 316 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு சேர வேண்டிய 8 லட்சத்து 84 ஆயிரத்து 65 ரூபாயை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள ஆவின் பால்பண்ணையில் நேற்று நடந்தது.

தளவாய்சுந்தரம்

நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று 8 லட்சத்து 84 ஆயிரத்து 65 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம், நிர்வாகிகள் ஜெயசீலன், மனோகரன், சுகுமாரன், நகர செயலாளர் சந்துரு, ஆவின் பொதுமேலாளர் தியானேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அறங்காவலர்கள்

முன்னதாக குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறையின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட சிவ குற்றாலம், ஜெயசந்திரன், அழகேசன், பாக்கியலெட்சுமி மற்றும் சதாசிவம் ஆகிய 5 பேரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை நேற்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story