ஒரே நாளில் 10 டன் மத்தி மீன்கள் சிக்கின கூடுதல் விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி
புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை பகுதிகளில் ஒரே நாளில் 10 டன் மத்தி மீன்கள் சிக்கின. கூடுதல் விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த ்நிலையில் புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் பைபர் படகுகளில் குறைந்து தூரம் சென்று மீன்பிடித்தனர். அப்போது மீனவர்கள் வலையில் அதிக அளவு மத்தி மீன்கள் சிக்கின. ஒரே நாளில் 10 டன் மத்தி மீன்கள் சிக்கின.
மீனவர்கள் மகிழ்ச்சி
பின்னர் மாலையில் கரை திரும்பிய மீனவர்கள் விற்பனைக்காக மத்தி மீன்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்றனர். ஒரு கிலோ மத்தி மீன் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனைஆனது. இந்த மீன்களை வியாபாரிகள் வாங்கி கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். மத்தி மீன்கள் கடந்த வாரத்தில் கிலோ ரூ.40-க்கு விற்ற நிலையில் கூடுதல் விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story