பாலியல் புகார்: கிராம நிர்வாக அதிகாரி பணியிடமாற்றம்


பாலியல் புகார்: கிராம நிர்வாக அதிகாரி பணியிடமாற்றம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:51 PM GMT (Updated: 2 Nov 2019 11:51 PM GMT)

பாலியல் புகார் தொடர்பாக, கிராம நிர்வாக அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

விருதுநகர்,

விருதுநகர் தாலுகா கூரைக்குண்டு கிராமத்தில் கிராமநிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் மாரியப்பன். இவர் பெண் கிராம நிர்வாக அதிகாரிகளை பாலியல் ரீதியாகவும், அவதூறாகவும் வாட்ஸ்-அப் மூலம் தொந்தரவு செய்ததாக பெண் கிராம நிர்வாக அதிகாரிகள் சார்பிலும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பிலும் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சிவஞானம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. செல்லப்பாவுக்கு உத்தரவிட்டார். இது பற்றி விசாரணை மேற்கொண்ட ஆர்.டி.ஓ., கூரைக்குண்டில் பணியாற்றிய கிராமநிர்வாக அதிகாரி மாரியப்பனை திருச்சுழி தாலுகா எருமைகுளம் கிராமத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story