மாவட்ட செய்திகள்

பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம் - டாக்டர் கவுதம் கணபதி தகவல் + "||" + For snakebite If appropriate treatment is provided Can prevent death

பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம் - டாக்டர் கவுதம் கணபதி தகவல்

பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம் - டாக்டர் கவுதம் கணபதி தகவல்
பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம் என்று டாக்டர் கவுதம் கணபதி கூறினார்.
ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியில் தன்வந்திரி கிரிட்டிக்கல் கேர் சென்டர் -கணபதி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பாம்புக்கடி மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் பலரும் இங்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்று செல்கிறார்கள். இதுகுறித்து ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் கவுதம் கணபதி கூறியதாவது:-


பாம்புக்கடி என்பது தவிர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் வயல்வெளிக்கு செல்லும்போது பாம்புக்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். பாம்புக்கடியால் ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே பலரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாம்பு கடித்தால் கடிபட்டவரை பாதுகாப்பாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குள் கடிபட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு விட்டால் அவரை எளிதில் பிழைக்க வைக்க முடியும்.

நமது சுற்றுப்புறங்களை பொறுத்தவரை நல்ல பாம்புகள் வயல்வெளிகளில் அதிகம் சுற்றித்திரியும். எனவே விவசாயிகள் வயல்களுக்கு செல்லும்போது தடிமனான ரப்பர் உறை காலணிகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது.

நல்லபாம்பு தவிர கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகியவை கடுமையான விஷம் கொண்ட அபாயகரமானவையாகும். இந்த பாம்புகள் கிணறுகள், நீர்த்தேக்கங்கள், மலைப்பகுதியையொட்டிய நிலங்களில் காணப்படும். தற்போது இருக்கும் தொழில்நுட்ப உலகில் விரியன் பாம்பு கடித்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டால் பாதிக்கப்பட்டவரை பிழைக்க வைக்க முடியும். எனவே விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் பொதுமக்கள் பாம்புக்கடி குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு பெற வேண்டும்.

ஈரோடு தன்வந்திரி கிரிட்டிக்கல் கேர் -கணபதி ஆஸ்பத்திரியில் பாம்புக்கடிக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக பல நவீன மருத்துவ உபகரணங்கள், கருவிகள் உள்ளன. எனவே ஒரு மணி நேரத்துக்குள் எங்கள் ஆஸ்பத்திரிக்கு பாம்புக்கடி பட்டவர்கள் கொண்டு வரப்பட்டால் உயிரிழப்பு இல்லாமல் சிறந்த சிகிச்சையை பெறலாம்.

பாம்பு கடித்தால் சில அறிகுறிகளை வைத்தே அது எந்த பாம்புக்கடி என்று கண்டறிய முடியும். குறிப்பாக நல்லபாம்பு கடித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் 96 வகையான பாம்புகள் உள்ளன.
 இவ்வாறு டாக்டர் கவுதம் கணபதி கூறினார்.

இவர் 3-ம் தலைமுறை டாக்டராவார். இவரது தாத்தா நாகராஜன், ஈரோட்டில் பிரசித்தி பெற்ற டாக்டர். தந்தை கணபதி பாம்புக்கடி சிகிச்சையில் தனி முத்திரை பதித்தவர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பாம்புக்கடி தொடர்பான மாநாடுகளில் பங்கேற்று உள்ளார்.

அவர் கூறும்போது, “பாம்புக்கடிக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதுபோல டெங்கு காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சை அளித்து வருகிறோம். சமீபத்தில் சென்னை டாக்டர் எஸ்.ரகுபதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் எங்கள் ஆஸ்பத்திரியிலேயே 20 இருதய நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்தனர். இதற்காக ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.மகாதேவன் பல்வேறு முகாம்களை நடத்தி ஏற்பாடுகளை செய்து இருந்தார். அறுவை சிகிச்சைக்கான செலவுகளை எஸ்கேஎம்.மயிலானந்தன், அ.கணேசமூர்த்தி எம்.பி., சக்திமசாலா நிறுவன இயக்குனர் சாந்தி துரைசாமி, மில்கா வொண்டர் கேக் இயக்குனர் ராஜா, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.