மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர் + "||" + In the Theni district, 2 thousand 993 candidates wrote the National Review Examination

தேனி மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்

தேனி மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்
தேனி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்.
தேனி,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைவழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது.

தேனி மாவட்டத்திலும் நேற்று தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் உத்தமபாளையத்தில் 3 தேர்வு மையங்களும், பெரியகுளத்தில் 3 தேர்வு மையங்களும், தேனியில் 5 தேர்வு மையங்கள் என மொத்தம் 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் மையங்களுக்கு காலை 8.30 மணிக்கு வரத்தொடங்கினர்.

மாவட்டத்தில் திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் 3 ஆயிரத்து 243 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 2 ஆயிரத்து 993 பேர் நேற்று தேர்வை எழுதினர். 250 பேர் தேர்வு எழுத வரவில்லை.