கல்பாக்கம் அருகே பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு


கல்பாக்கம் அருகே பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 2019-11-04T00:06:49+05:30)

கல்பாக்கம் அருகே பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. மரணம் அடைந்து விட்டார். இவரது மகன் செல்வகுமார் (வயது 17). இவர் பாண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ருத்ரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் யுகேஷ் (12). திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று செல்வகுமார், அவரது தம்பி ரமேஷ் (15), உறவினர் யுகேஷ், அவரது தங்கை கீர்த்திகா (10) ஆகியோர் பாலாற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமாரும், யுகேசும் பாலாற்றில் மூழ்கி தத்தளித்தனர்.

கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் செல்வகுமாரும், யுகேசும் பாலாற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரையும் பொதுமக்கள் காப்பாற்றினர்.

திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து சென்று செல்வகுமார், யுகேஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story