திருவள்ளூர் மாவட்டத்தில், 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருவள்ளூர் மாவட்டத்தில், 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Nov 2019 4:00 AM IST (Updated: 4 Nov 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பொது சேவை மைய அமைப்பு மூலமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரத்தினை அரசுக்கு அளிப்பதற்காக இந்த கணக்கெடுப்பில் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 223 மேற்பார்வையாளர்களின் கீழ் 735 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 204 மேற்பார்வையாளர்களின் கீழ் ஆயிரத்து 20 கணக்கெடுப்பாளர்கள் இந்த கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் விவரங்களை சேகரிக்க தங்கள் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் நேரில் வரும்போது பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த கணக்கெடுப்பு விவரங்கள் மக்கள் நலத்திட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பயன்படும் என்பதால் பொதுமக்கள் சரியான விவரங்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், புள்ளியில் துணை இயக்குனர் மரியஜாய், கோட்டப்புள்ளியியல் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story