மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் இருந்து, சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பஸ்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார் + "||" + From Thiruvannamalai, 2 new refrigerated buses to Chennai

திருவண்ணாமலையில் இருந்து, சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பஸ்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் இருந்து, சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பஸ்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பஸ் போக்குவரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேற்று முதல் தினமும் 2 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி, மேல்மருவத்தூர் வழியாக சென்னை செல்கிறது. தினமும் காலை 6 மற்றும் 7 மணிக்கும், மாலையில் 5 மற்றும் 6 மணிக்கும் திருவண்ணாமலையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்லும். அங்கிருந்து காலை 11 மற்றும் 12 மணிக்கும், இரவு 10 மற்றும் 11 மணிக்கும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு வரும்.

இந்த குளிர்சாதன பஸ்களில் தானியங்கி கதவுகள், சொகுசு இருக்கைகள், ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளன. அவசர வழி கதவுகளும் உள்ளது. இந்த பஸ்களுக்கு ரூ.215 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய குளிர்சாதன பஸ்களின் தொடக்க விழா திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் அவர் பஸ்சில் உள்ள வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு இருக்கையில் அமர்ந்து பார்த்தார். விழாவில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தாசில்தார் அமுல், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், போக்குவரத்து மண்டல மேலாளர் வெங்கடேசன், துணை மேலாளர் (வணிகம்) கிருஷ்ணமூர்த்தி, உதவி மேலாளர் (இயக்கம்) எம்.பாஸ்கர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆரணியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
ஆரணியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
2. திருவண்ணாமலையில் ரூ.84 லட்சத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள்
திருவண்ணாமலையில் ரூ.84 லட்சத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 60 புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3. திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா - அமைச்சர் பங்கேற்பு
திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
4. ஆரணியில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ரூ.58½ லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு
ஆரணியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ரூ.58½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலசபாக்கத்தில் நடந்த நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
5. 21,868 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
திருவண்ணாமலை, ஆரணியில் 21,868 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.