வரத்து குறைவு எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு தஞ்சையில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை


வரத்து குறைவு எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு தஞ்சையில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 9:06 PM GMT)

வரத்து குறைவு எதிரொலியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. தஞ்சையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சை,

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் விலை உயர தொடங்கியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே ரூ.50 வரை ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் விற்பனை ஆனது. வெளிச்சந்தைகளில் வெங்காயம் ரூ.70 வரை விற்பனை ஆனது.

இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ‘அப்படி என்னதான் ஆச்சு...?’ என்று எண்ணும் அளவுக்கு வெங்காயத்தின் விலை மீண்டும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருக்கிறது. வரத்து குறைந்ததின் எதிரொலியே வெங்காயம் விலையின் அதிரடி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-

வரத்து குறைவே காரணம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தும் 450 முதல் 500 லாரிகள் வரை காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக மராட்டியம் (சோலாபூர், புனே), கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து 60 லாரிகள் வரை வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே சரிவர விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே வந்துகொண்டிருந்தன.

இந்த நிலையில் தீபாவளியையொட்டி, வெங்காயம் பயிரிடப்பட்ட மாநிலங்கள் தொடர் மழை பெய்ததால், விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் வரத்தும் பாதிக்கப்பட்டு, தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 லாரிகள் வரையே வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. இதனால் கடந்த வாரத்தில் ரூ.50 வரை விற்பனை ஆன ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் தற்போது ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை ஆகிறது. இது இன்னும் விலை உயரலாம்.

சாம்பார் வெங்காயம் விலையும் உயர்வு

சிறிய கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் ரூ.80 முதல் ரூ.85 வரை வெங்காயம் விற்பனை ஆகிறது. அதேபோல சாம்பார் வெங்காயம் விலையும் லேசாக உயர்ந்திருக்கிறது. சாம்பார் வெங்காயத்தை பொறுத்தவரையில் அதுவும் விவசாயிகள் கையிருப்பில் உள்ள சரக்குகளே தற்போது விற்பனைக்கு வருகிறது. வெளிச்சந்தைகளில் ரூ.90 முதல் ரூ.100 வரை சாம்பார் வெங் காயம் விற்பனை செய்யப் படுகிறது.

கடந்த வார விலையை ஒப்பிடுகையில் தற்போது கேரட் ரூ.15 விலை உயர்ந் திருக்கிறது. தக்காளி, சவ்சவ் தலா ரூ.10-ம், வெண்டைக்காய் ரூ.20-ம் விலை உயர்ந்திருக்கிறது. அவரைக்காய் மட்டும் ரூ.10 விலை குறைந்துள்ளது. மற்றவகையில் காய்கறி விலையில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறி னார்.

தஞ்சையில் கிலோ ரூ.100

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக அங்கிருந்து வெங்காயம் வரத்து அடியோடு நின்று விட்டது. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வெங்காயத்தை தான் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் வெங்காய தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக ரூ.80-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சின்னவெங் காயமும் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட் டது.

Next Story