காமராஜர் மார்க்கெட் மூடப்படுவதையடுத்து தஞ்சையில், தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்


காமராஜர் மார்க்கெட் மூடப்படுவதையடுத்து தஞ்சையில், தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Nov 2019 4:30 AM IST (Updated: 4 Nov 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் மார்க்கெட் வருகிற 7-ந் தேதியுடன் மூடப்படுவதையடுத்து தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.904 கோடி செலவில் 12 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள் மேம்பாடு, குடிநீர் அபிவிருத்தி பணிகள், சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தஞ்சையில் உள்ள பழமை வாய்ந்த காமராஜர் மார்க்கெட் மற்றும் சரபோஜி மார்க்கெட் புதிதாக கட்டப்படுகிறது. இதில் காமராஜர் மார்க்கெட்டில் மட்டும் ரூ.17 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தற்காலிக கடைகள்

இதையடுத்து இங்கு செயல்படும் கடைகள் வருகிற 8-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

இதற்கான அறிவிப்பும் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு, மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்காக தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தஞ்சை காவேரி நகரில் உள்ள எஸ்.பி.சி.ஏ. திடலில் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து இந்த திடலில் உள்ள முட்புதர்கள், செடி, கொடிகள் அகற்றும் பணிகள் பொக்லின் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆங்காங்கே மண் கொட்டப்பட்டு தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story